கூடலூர் கோழிக்கோடு இடையே ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை


கூடலூர் கோழிக்கோடு இடையே ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 8 March 2022 8:30 PM IST (Updated: 8 March 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-கோழிக்கோடு இடையே ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்

கூடலூர்-கோழிக்கோடு இடையே ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநில எல்லையில் கூடலூர் அமைந்து உள்ளது. ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் விளையக்கூடிய உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் கூடலூர் வழியாக கேரளாவுக்கு சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப் படுகிறது. 

மேலும் கர்நாடகாவில் இருந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கூடலூர் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக மைசூருக்கும், ஊட்டிக்கும் செல்கின்றனர். 

இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக கூடலூர் திகழ்கிறது. 

விபத்துகள் அதிகரிப்பு

இந்த நிலையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பல இடங்கள் மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தொடர்ந்து ஆபத்தான வளைவுகளும் பல உள்ளது. 

இதில் கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் ஆபத்தான வளைவில் ஏராளமான சரக்கு லாரிகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகின்றன. தடுப்பு சுவர் இல்லாததால் வாகன விபத்துகள் தொடர்வதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆபத்தான வளைவு பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- கோடை சீசன் தொடங்க உள்ளதால் கூடலூர் வழியாக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும். வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் இரவில் வாகன விபத்துகளும் அதிகரிக்கலாம். 

எனவே அந்த வளைவில் தடுப்புச்சுவர் அல்லது தடுப்பு கம்பிகள் பொருத்தி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஓட்டினால் இரவு நேர பயணத்தில் வாகன விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும். 

இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story