கோத்தகிரி அருகே வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன
கோத்தகிரி அருகே வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன.
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து கடைக்கோடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மோகன் என்பவரது வீட்டின் மேற்கூரையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அதிகாரி மாதன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த வீட்டின் மேற்கூரையில் பதுங்கி இருந்த சாரைபாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
அதுபோன்று கோத்தகிரி அருகே உள்ள கீழ் அனையட்டி பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது வீட்டிற்குள் 10 அடி நீள சாரைப்பாம்பு புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story