அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் விரைவில் சிறை செல்வார்கள்- சிவசேனா பரபரப்பு தகவல்


படம்
x
படம்
தினத்தந்தி 8 March 2022 9:31 PM IST (Updated: 8 March 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

மிரட்டி பணம் பறிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் விரைவில் சிறை செல்வார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

மிரட்டி பணம் பறிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் விரைவில் சிறை செல்வார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

பா.ஜனதாவின் ஏ.டி.எம்.

மராட்டியத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு, மத்திய விசாரணை முகமைகள் மீது ஆளுங்கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 

இந்தநிலையில் நேற்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

எப்போது எல்லாம் அமலாக்கத்துறையினர் ஏதாவது நிறுவனங்களில் சோதனை நடத்துகிறார்களோ அப்போது எல்லாம், சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ஜித்தேந்திர நவ்லானி என்பவரின் வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது.

 அமலாக்கத்துறை மற்றும் அதன் சில அதிகாரிகள் பா.ஜனதாவின் ஏ.டி.எம். எந்திரம் போல மாறிவிட்டனர். அதுகுறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்திலும் வழங்கி உள்ளேன்.

ஜெயிலுக்கு போவார்கள்

மும்பை போலீசார் 4 அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிரான ஊழல், மிரட்டி பணம் பறித்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீசார் அதற்கு தகுதியானவர்கள். என்னுடைய வார்த்தையை குறித்து கொள்ளுங்கள், சில அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெயிலுக்கு போவார்கள். 
இவ்வாறு அவர் கூறினார்.

 வருமான வரித்துறையினர் நேற்று மந்திாி ஆதித்ய தாக்கரே மற்றும் அனில் பரப்பிற்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய நிலையில், சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையினருக்கு எதிராக குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
----

Next Story