வளவனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
வளவனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் குமாரபுரியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி மாத உற்சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 2-ந் தேதி மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மாலை 3 மணியளவில் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கக்கவசத்தில் தேரில் எழுந்தருளினார். தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
இந்த தேர், வளவனூர் குமாரபுரி பகுதியின் மாடவீதிகள் வழியாக சென்று இரவு 7 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் வளவனூர் குமாரபுரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story