விழுப்புரம் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
விழுப்புரம்
சீருடை பணியாளர் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் சார்பில் 444 பணியிடங்களுக்கான சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மையம்
இத்தேர்வையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தரைத்தளத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உதவி மையத்தை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்த உதவி மையம் ஒரு தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலரை கொண்டு செயல்படும். இங்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களை நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 04146-220129 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டும், இணையதளத்தில் படிவத்தை பூர்த்தி செய்வது குறித்தும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அறிந்து பயன்பெறலாம் என்றார்.
Related Tags :
Next Story