விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான மேலாண்மை பயிற்சி


விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான மேலாண்மை பயிற்சி
x
தினத்தந்தி 8 March 2022 10:01 PM IST (Updated: 8 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான மேலாண்மை பயிற்சி


விழுப்புரம்

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் அண்ணா பணியாளர் கல்லூரி நிர்வாகம் மூலம் மண்டல அளவில் அரசு அலுவலர்களுக்கான நடைமுறை வழக்கு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிற்சி வழங்கிடும் வகையில் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான 2 நாட்கள் மேலாண்மை பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சியில் சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு பயனுள்ள வகையில் பயிற்சிகள் அளித்தனர். 2 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் மாவட்ட அளவிலான அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் டி.மோகன் அறிவுறுத்தியுள்ளார். இப்பயிற்சியின்போது அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி பயிற்சி இயக்குனர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story