கடன் வாங்கி தருவதாக கூறி ரூ 9 லட்சம் மோசடி
கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போடி நகராட்சி தலைவரின் கணவர் போலீசில் புகார் கொடுத்தார்
போடி:
நகராட்சி தலைவரின் கணவர்
தேனி மாவட்டம், போடி குப்பழகிரி தோட்ட பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). 29-வது வார்டு கவுன்சிலர். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி. இவர் போடி நகராட்சி தலைவராக உள்ளார். சங்கர், அதே பகுதியில் ஏலக்காய் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர், தேனி மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், காஞ்சீபுரத்தை சேர்ந்த முரளி என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர், காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக இருப்பதாகவும், ரூ.2 கோடி கடன் வாங்கி தருவதாகவும் கூறினார். இதற்காக 5 காசோலைகள், ரூ.20-க்கான பத்திரம் ஆகியவற்றில் ைகயெழுத்து இட்டு வழங்கினேன்.
ரூ.9 லட்சம் மோசடி
பின்னர் டிசம்பர் மாதம் அவர் கடன் பெற்று தருவதற்கு முன்பணமாக ரூ.9 லட்சம் கேட்டார். அதில் முதல் தவணையாக ரூ.2 லட்சமும், 2-வது தவணையாக ரூ.7 லட்சமும் முரளி கூறிய வங்கி கணக்கில் செலுத்தினேன். ஆனால் அவர் கடன் பெற்று தரவில்லை. இதையடுத்து அவரை சந்திக்க காஞ்சீபுரம் சென்றேன். அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.
ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் முரளி அளித்த முகவரி போலியானதாக இருந்தது. இதையடுத்து கடன் வாங்கி தருவதாக அவர் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி போடி நகர் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story