கட்டுடல் மல்யுத்தம் போட்டிகளில் விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை
கட்டுடல் மல்யுத்தம் போட்டிகளில் விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை
விழுப்புரம்
திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான சிறந்த கட்டுடல், மல்யுத்தம் ஆகிய போட்டிகள் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் கட்டுடல் போட்டியில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் அப்துர்ரஹ்மான் முதல் இடத்தையும், மல்யுத்த போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் மாணவர் பாலகணபதி 2-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்கள் இருவரையும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், தமிழ்த்துறை தலைவர் மகாவிஷ்ணு, உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story