பெண் வரதட்சணை கொடுமை புகார் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
பெண் வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயா (வயது 27). இவருக்கும், தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் விஜயாவிற்கும் அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் விஜயா அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் திருமணத்தின் போது 15 பவுன் நகை வரதட்சணையாக வழங்கியதாகவும், அதன் பின்பு கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீசார், சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story