மலை அடிவாரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றம்
தொண்டமானூரில் மலை அடிவாரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றப்படடது.
வாணாபுரம்
திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மலைப்பகுதிகள் அதிகளவில் உள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதுடன், வீடுகள் கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தனிநபர் வீடு கட்டி வருவதாக வருவாய்த் துறைக்கு புகார் சென்றதையடுத்து மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரம் கொண்டு கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை அகற்றினர். அப்போது வீடுகட்டிய நபர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story