அந்தந்த ஊராட்சிகளில் இருந்து டெங்கு மஸ்தூர் பணியாளர்களை நியமிக்க வேண்டும்
அந்தந்த ஊராட்சிகளில் இருந்து டெங்கு மஸ்தூர் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்
அந்தந்த ஊராட்சிகளில் இருந்து டெங்கு மஸ்தூர் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஆணையாளர் சம்பத் வரவேற்றார். இளநிலை உதவியாளர் வடிவேல் தீர்மானங்களை வாசிக்க, விவாதம் இன்றி அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
டெங்கு மஸ்தூர் பணியாளர்கள்
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், அனுராதா சுகுமார், பாக்கியலட்சுமி லோகநாதன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
அப்போது, டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பேருராட்சிகளில் இருந்து பணியாளர்களை நியமிக்காமல் அந்தந்த ஊராட்சிகளில் இருந்து பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
வளர்ச்சிதிட்டப்பணிகளை அனைத்து ஊராட்சிகளிலும் பரவலாக கிடைக்கும் வகையில் பணிகளை தேர்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிட வசதி இல்லாத பள்ளிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றியக்குழு கூட்டங்களில் ஒரு சில துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். வருகிற கூட்டங்களில் அனைத்து துறை அலுவலர்களும்கலந்து கொண்டால்தான் சம்பந்தப்பட்ட துறைகளின் மீது கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.
ராஜன்தாங்கல் தளவாகுளம் பராமரிக்கப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குளத்தை சீரமைத்து மேம்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒன்றிய ஆணையாளர் சம்பத், வட்டார கல்வி அலுவலர்மோகன், கால்நடைதுறை மருத்துவர் ஆனந்தன், ஒன்றிய பொறியாளர் வினோத்கண்ணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியகவுன்சிலர்கள், ஒன்றிய பொறியாளர் பிரசன்னா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலட்சுமி, மகாலட்சுமி, அப்துல் கபார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமளா, தோட்டக்கலை உதவி அலுவலர் மாணிக்கம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story