பெண்ணிடம் நகை பறித்து சென்றபோது மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து கொள்ளையன் காயம் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

பெண்ணிடம் நகை பறித்து சென்றபோது மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து கொள்ளையன் காயம்  பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 8 March 2022 11:01 PM IST (Updated: 8 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்றபோது மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து கொள்ளையன் காயம் அடைந்தான். அவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்றபோது மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து கொள்ளையன் காயம் அடைந்தான். அவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், கங்கலேரி பகுதியை சேர்ந்தவர் பிந்து (வயது 51). இவர் நேற்று முன்தினம் ஜாகிர் நாட்றம்பள்ளி கூட்ரோடு பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபர், பிந்து கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிந்து சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த கொள்ளையனை பிடிக்க விரட்டி சென்றனர். அப்போது அங்கிருந்த கல் மீது மோதியதில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இதில் கொள்ளையனின் கை முறிந்து காயம் அடைந்தான். அவனை பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணை
இதையடுத்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கொள்ளையன் திருப்பத்தூர் மாவட்டம், பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (22) என தெரிய வந்தது. அவனை போலீசார் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story