கிருஷ்ணகிரியில் உலக மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


கிருஷ்ணகிரியில் உலக மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 8 March 2022 11:01 PM IST (Updated: 8 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள், ஜீவா செவிலியர் கல்லூரி மாணவிகள், தர்மபுரி பத்மாவதி மருந்தாளர் கல்லூரி மாணவிகள், மேலுமலை கே.எம்.வி. சுகாதார ஆய்வாளர் கல்லூரி மாணவிகள் மற்றும் பி.எஸ்.வி. செவிலியர் கல்லூரி என 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண்கள் நலன், மற்றும் மகளிர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் காந்தி ரோடு, வழியாக ரவுண்டானா, பெங்களூரு சாலை வழியாக அரசு தலைமை மருத்துவமனையை வந்தடைந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், கிருஷ்ணகிரி இந்திய மருத்துவ சங்க தலைவர் செல்வி, செயலாளர் அமுதா, டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story