பர்கூர் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
பர்கூர் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பர்கூர்:
ஊத்தங்கரை, வெள்ளகுட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 31). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் பர்கூர், அண்ணா நகர் அருகே சென்றார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து வெங்கடேசன் பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த தினகரன் (20), 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் கிருஷ்ணகிரி போகனப்பள்ளியில் முனிராஜ் என்ற கட்டிட மேஸ்திரி என்பவரின் மோட்டார் சைக்கிளையும் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
Related Tags :
Next Story