ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்; 3 பேர் கைது
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே 10 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
வெம்பக்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஏழாயிரம்பண்ணை திருவேங்கடம் சாலை குகன்பாறை விளக்கில் குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக திருவேங்கடம் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை சிறை பிடித்து வெம்பக்கோட்டை போலீசாரிடம் குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
3 பேர் கைது
அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா பிறப்பன் விளை கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஆண்டனி டேவிட், லாரி உரிமையாளர் கருங்கல் பகுதியை சேர்ந்த ரமேஷ், இவர்களுக்கு ரேஷன் அரிசி வழங்கிய திருவேங்கடம் ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்த சீனிப்பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய லாரி, அதில் இருந்த 10.5 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story