விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 March 2022 11:47 PM IST (Updated: 8 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வெளிப்பாளையம்:
காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் ஊக்கத்ெதாகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பயிர் ஊக்கத் தொகை
நாகை மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் திவ்யா (பொறுப்பு) ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில்  ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் இடுப்பொருட்கள் வாங்க பயிர் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
ரூ.15 ஆயிரம்
காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்ேடருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இயற்கை உரம், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவை காய்கறி பயிர்களின் சாகுபடி செலவை குறைத்து அதிக மகசூல் பெற வழிவகை செய்யும். 
இந்த பயிர் ஊக்கத்தொகை பெற விருப்பும் குறைந்தபட்சம் கால்(¼) ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்து வரும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். 
கணினி சிட்டா
விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், கணினி சிட்டா, காய்கறி சாகுபடி செய்வதற்கான அடங்கல் ஆகியவற்றுடன், நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story