முத்துப்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் ஊர் திரும்பினார்


முத்துப்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் ஊர் திரும்பினார்
x
தினத்தந்தி 8 March 2022 11:55 PM IST (Updated: 8 March 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவித்த முத்துப்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் ஊர் திரும்பினார். அவரை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்றனர்.

முத்துப்பேட்டை;
உக்ரைனில் சிக்கி தவித்த  முத்துப்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் ஊர் திரும்பினார். அவரை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்றனர். 
முத்துப்பேட்டை மாணவர்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் அம்மலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருடைய மனைவி லதா. இவர்களின் மகன் சந்தோஷ்ரூபன்(வயது23). இவர் உக்ரைன் நாட்டில் 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில் சந்தோஷ்ரூபன்  சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர் அவரை மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். 
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை
மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மாணவர் சந்தோஷ்ரூபன் உக்ரைனில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் காரில் திருவாரூர் வந்த மாணவர் சந்தோஷ் ரூபன் அங்கிருந்து பஸ் பிடித்து நேற்று காலை அம்மலூர் வந்து சேர்ந்தார்.
இந்தநிலையில் வீடு திரும்பிய மாணவர் சந்தோஷ் ரூபனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டிஅணைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி  மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்பட முக்கிய பிரமுகர்கள் மாணவன் சந்தாஷ்ரூபனை  நேரில் சந்தித்து உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

Next Story