புதுக்கோட்டையில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் பூஜ்யம்


புதுக்கோட்டையில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் பூஜ்யம்
x
தினத்தந்தி 9 March 2022 12:08 AM IST (Updated: 9 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் பூஜ்யமாக இருந்தது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்தது. இதனால் தினசரி தொற்று பாதிப்பு குறித்து வெளியிடப்படும் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பூஜ்யம் இடம் பெறுகிறது. இதேபோல மாவட்டத்தில் நேற்று யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் பூஜ்யம் இடம்பெற்றிருந்தது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 455 ஆக உள்ளது. கொரோனா சிகிச்சையில் 3 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 21 ஆக உள்ளது. கொரோனாவுக்கு தற்போது 8 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

Next Story