இலுப்பூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


இலுப்பூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 March 2022 12:17 AM IST (Updated: 9 March 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா உடற்கல்வியியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு நிறுவனர் முனைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயக்குமார் விழிப்பணர்வு சிறப்புரை வழங்கினார். இலுப்பூர் பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் இலுப்பூர் கடைவீதி வழியாக அரசு மருத்துவமனை வரை சென்று முடிவடைந்தது. ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பி சென்றனர். இதில் இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மதர்தெரசா உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Next Story