புதுக்கோட்டையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்


புதுக்கோட்டையில்  மகளிர் தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 March 2022 12:20 AM IST (Updated: 9 March 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதாராமு, அரசு அலுவலர்களுடன் கலந்து கொண்டு கொண்டாடினார். மேலும் மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று உலக மகளிர் தின விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமை தாங்கி பேசினார். மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி பெண் போலீசார் கொண்டாடினர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, ஆறுமுகம் உள்பட பெண் போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில்குமார் தலைமை தாங்கினார். முத்துராஜா எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் நாகராஜன், தி.மு.க.வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி மற்றும் பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Next Story