ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தொடங்கிய நாள் முதல் தொழிலாளர்களின் நலனுக்காக ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் திடீரென்று எந்தவித முன் அறிவிப்புமின்றி மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு நிரந்தர அரசு கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் தொழிலாளர்நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவாஜி சிறப்புரையாற்றினார். மதுரைக்கு மாற்றப்பட்டுள்ள துணை ஆணையர் அலுவலகத்தினை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக ராமநாதபுரத்தில் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கேற்ப சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாபெரும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதில் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story