வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
x
தினத்தந்தி 9 March 2022 12:46 AM IST (Updated: 9 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி-அதிகாரி தகவல்

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என்று வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

போட்டி தேர்வு

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு படித்த இளைஞர்கள் பல்வேறு அரசுப்பணி வாய்ப்புகளைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
 எனவே, தற்போது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

பயிற்சி வகுப்பு

தற்போது இப்பயிற்சி வகுப்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து பயன் பெற்று வருகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளில் வாரம் ஒருமுறை மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள 5,529 காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 4-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
எனவே அரசு வேலையை தன்னுடைய கனவாகக் கொண்டுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மேற்காணும் தேர்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயன்தரும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்துப் பாடக்குறிப்புகளும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 
எனவே, போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story