கிராம மக்கள் பஸ்களை சிறைபிடித்து போராட்டம்

சமயபுரம், மார்ச்.9-
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சி மூவராயன்பாளையம் மேலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 92 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் ஒரு ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்தும், கூடுதலாக ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தியும் கிராமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இதைகண்டித்து நேற்று மூவராயன்பாளையம் கிராம மக்கள் கடைவீதி அருகே ஒன்று திரண்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி, மூவராயன்பாளையம் வழியாக சித்தாம்பூர் மற்றும் தண்டலை ஆகிய கிராமங்களூக்கு சென்ற 2 அரசு பஸ்களை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story