வாகனம் மோதி வாலிபர் படுகாயம்


வாகனம் மோதி வாலிபர் படுகாயம்
x

வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

தரகம்பட்டி, 
கடவூர் தாலுகா எழுவகரியூரை சேர்ந்தவர் கருணை ராகவன் (வயது 19). இவர் பாலவிடுதியில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வரும் தனது அண்ணனை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வையம்பட்டி சாலையில் பொன்னாக்கவுண்டனூர் பிரிவு ரோடு அருகே வளைவில் திரும்பிய போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த கருணை ராகவனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story