நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்- விவசாயிகள்
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கும்பகோணம்:-
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசின் 2022-2023-ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஆதி கலியபெருமாள் தலைமை தாங்கினார். சின்னதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் விமலநாதன் தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கேரள மாநிலத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 795, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 500 என குறைந்தபட்ச விலை அளிக்கப்படுவதை போல் தமிழகத்திலும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
நிலுவை தொகை
கரும்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கரும்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பெண் விவசாயிகளுக்கும் சிறப்பு ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தி மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சாமிநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story