விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு விழிப்புணர்வு பிரசாரம்


விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 9 March 2022 1:39 AM IST (Updated: 9 March 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது

சிங்கம்புணரி,

முல்லை பெரியாறு அணை குறித்த தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவது, வைகை அணை பாசனத்திற்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மதுரையில் மார்ச் 15-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சிங்கம்புணரி பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்கு வைகை பெரியாறு விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆதிமூலம் மற்றும் செயலாளர் மேலூர் உதினிப்பட்டி அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பிஆர்.பாண்டியன் பேசினார். அப்போது அவர், முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்த நிலையில் அந்த அணையை உடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு போராட்டம் நடத்துகிறது என்றார்.

Next Story