மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் ஜேம்ஸ் படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது


மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் ஜேம்ஸ் படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது
x
தினத்தந்தி 9 March 2022 1:52 AM IST (Updated: 9 March 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் ஜேம்ஸ் படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது

பெங்களூரு:
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர், புனித்ராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இழப்பால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி கர்நாடக மக்களும் துயரில் ஆழ்ந்தனர். அவர் இறப்பதற்கு முன்பு ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் டப்பிங் சேர்ப்பு பணி நிறைவடையாமல் இருந்தது. தனது சகோதரர் புனித்ராஜ்குமாருக்கு, அவரது அண்ணன் சிவராஜ்குமார் பின்னணி குரல் கொடுத்துள்ளார். புனித்ராஜ்குமார் நடித்த இறுதிபடம் என்பதால் இந்த படத்தின் முதல் போஸ்டர் வந்த  போதும், டீசர் வந்த போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் புனித்ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம், அவரது பிறந்தநாளான வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி பெங்களூரு கமலா நகர், மெஜஸ்டிக் உள்பட நகரின் பல பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் ஜேம்ஸ் திரைப்படம் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி தியேட்டர்கள் முன்பு புனித்ராஜ்குமாரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு பால் அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து, பூசணி- தேங்காய் உடைத்து அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் நேற்று கமலாநகரில் உள்ள வீரபத்ரேஸ்வரா தியேட்டரில் புனித்ராஜ்குமாரின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. அந்த கட்-அவுட்டில் அவரது தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மா படங்களும் இடம்பெற்றுள்ளது. அந்த கட்-அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். பூசணிக்காய், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பின்னர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Next Story