என்னென்ன பிரிவுகளில் எந்தெந்த தண்டனை?
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேருக்கான தண்டனை எந்தெந்த பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது,
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேருக்கான தண்டனை எந்தெந்த பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது, என்பது பற்றிய தீர்ப்பு விவரம் வருமாறு:-
3 ஆயுள்தண்டனை
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 302-ன் (கொலைக்குற்றம்) கீழ் ஒரு ஆயுள்தண்டனை, 120 பி-ன்கீழ் (கூட்டுச்சதி) ஒரு ஆயுள் தண்டனை, 364 உட்பிரிவு 3 (2) (V) தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் ஒரு ஆயுள் தண்டனை என மொத்தம் 3 ஆயுள்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
அருண் (29), குமார் என்ற சிவகுமார் (43) சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகிய 6 பேருக்கு 302-வது பிரிவின்கீழ் (கொலைக்குற்றம்), 120-பி பிரிவின்கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் ஒரு ஆயுள் தண்டனை என தலா இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இறுதி மூச்சு வரை சிறை
சந்திரசேகரனுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் மட்டும் ஒரு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
பிரபு, கிரிதர் ஆகிய இருவருக்கும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தலா ஒரு ஆயுள்தண்டனையும், 212-வது பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் மற்றும் 216-வது பிரிவின்கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேற்கண்ட குற்றவாளிகள் 10 பேரும் தங்களின் இறுதி மூச்சு உள்ள வரை (அதாவது சாகும் வரை) சிறையில் இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகை செலுத்த தவறினால் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் இழப்பீடு
கோகுல்ராஜின் தாயார் சித்ராவுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி இருப்பின், பாதிக்கப்பட்டோர் இழப்பீடு நலச்சட்டத்தின்கீழ் அவருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதற்கு மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்திற்கு இந்த கோர்ட்டு பரிந்துரை செய்கிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்தனர்
இந்த தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும், கோர்ட்டுக்கு வெளியில் கோகுல்ராஜ் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோஷங்களை எழுப்பியும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story