நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு


நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 9 March 2022 2:10 AM IST (Updated: 9 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே வாலிபரிடம் 2 பேர் நூதன முறையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

களக்காடு:
அம்பை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் இளையராஜா (வயது 19). இவர் தனது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (26) என்பவர் இளையராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ேமாட்டார்சைக்கிளை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார். 

இதை உண்மை என்று நம்பிய இளையராஜா தனது மோட்டார் சைக்கிளை களக்காடு அருகே கேசவநேரி பாலம் அருகே கொண்டு வந்தார். அங்கு தயாராக நின்ற முத்துகிருஷ்ணனும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிைள ஓட்டி பார்த்து வாங்கி கொள்வதாக இளையராஜாவிடம் தெரிவித்தனர். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து முத்துகிருஷ்ணனும், அவருடன் வந்தவரும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. அப்போது தான் இளையராஜாவுக்கு அவர்கள் இருவரும் தன்னிடம் நூதன முறையில் ேமாட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. ேமாட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இளையராஜா தனது செல்போனையும் வைத்திருந்தார். அதையும் அவர்கள் கொண்டு சென்று விட்டனர். 

இதுகுறித்து இளையராஜா களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துகிருஷ்ணன் உள்பட 2 பேரையும் ேதடி வருகின்றனர்.





Next Story