உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை


உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை
x
தினத்தந்தி 9 March 2022 3:00 AM IST (Updated: 9 March 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்புவனம், 

திருப்புவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை

திருப்புவனம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்களான ராஜேஷ்குமார், தியாகராஜன், செந்தில், முத்துக்குமார் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து திருப்புவனம் நகரில் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது 4 கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோவை கைப்பற்றியும், தேதி போடாத லேபிள்கள், காலாவதியான மிக்சர், சுவீட் பாக்கெட்டுகளை கைப்பற்றியும், காலாவதியான மளிகைப் பொருட்கள் என 22 கிலோவை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

பராதம்

புகையிலை விற்பனை செய்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த 4 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற கடைகளில் காலாவதியான பொருட்களை விற்க கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.

Next Story