நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 9 March 2022 3:13 AM IST (Updated: 9 March 2022 3:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வள்ளியூர்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம், திசையன்விளை, வள்ளியூர் மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. 

எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, திருவம்பலாபுரம், மகாதேவன்குளம், இடையன்குடி, குட்டம், அப்புவிளை, உவரி, விஜயநாராயணம், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர், ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, சிறப்பு பொருளாதார மண்டல தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.

Next Story