தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
கடையம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
கடையம்:
கடையம் அருகே உள்ள பங்களா குடியிருப்பை சேர்ந்தவர் அந்தோணி பெருநாந். இவருக்கு சொந்தமான ேதாட்டம் கடனா அணைக்கு செல்லும் வழியில் உள்ளது. நேற்று அதிகாலை அந்த தோட்டத்துக்குள் புகுந்த 3 காட்டு யானைகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னைகள், 3 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள், 2 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி சென்று உள்ளன.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே சோலார் மின்வேலி அமைத்து வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story