மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா
சேலம் அரிசிப்பாளையம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
சேலம்:-
சேலம் அரிசிப்பாளையம் மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. விழாவில் நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் மாலையில் கும்ப பூஜை, மாவிளக்கு எடுத்து வருதல், இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடந்தன. மேலும் பக்தர்கள் கடவுள் வேடமணிந்து வந்திருந்தனர். திருவிழாவில் இன்று (புதன்கிழமை) உருளுதண்டம், பொங்கல் வைத்து வழிபாடு, அலகு குத்துதல் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story