ஈஞ்சம்பாக்கத்தில் பட்டா கேட்டு பெண்கள் மனித சங்கிலி போராட்டம்


ஈஞ்சம்பாக்கத்தில் பட்டா கேட்டு பெண்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 March 2022 2:40 PM IST (Updated: 9 March 2022 2:40 PM IST)
t-max-icont-min-icon

ஈஞ்சம்பாக்கத்தில் பட்டா கேட்டு பெண்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளை அரசு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு பட்டா வழங்க கோரியும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள், பள்ளி குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈஞ்சம்பாக்கம் சிக்னல் அருகில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலிபோல் நின்றிருந்த பொதுமக்கள், பட்டா வழங்க வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இதையொட்டி அங்கு நீலாங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story