புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, மார்ச்.9
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 608 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 6 பேர் காரைக்காலையும், 2 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3 பேர் வீடுகளில் 26 பேர் என 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 5 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 1.32 சதவீதமாகவும், குணமடைவது 98.80 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 148 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 945 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 56 பேரும் செலுத்திக்கொண்டனர்.
Related Tags :
Next Story