ரிப்பன் மாளிகையில் மகளிர் தின விழா கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த பெண் டாக்டர்களுக்கு கேடயம்


ரிப்பன் மாளிகையில் மகளிர் தின விழா கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த பெண் டாக்டர்களுக்கு கேடயம்
x
தினத்தந்தி 9 March 2022 5:53 PM IST (Updated: 9 March 2022 5:53 PM IST)
t-max-icont-min-icon

ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த பெண் டாக்டர்களை பாராட்டி கேடயங்களை மேயர் பிரியா வழங்கினார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய பெண் டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் சேவைகளை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், நடனம், பாடல், கவிதை, சிலம்பாட்டம், பறையிசை நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டாக்டர் எஸ்.மனிஷ், விஷூ மஹாஜன், டி.சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹமான், ஓமந்தூரார் ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி, மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story