கடலில் மூழ்கி மாயமான வாலிபர் உடல் கரை ஒதுங்கியது
பழவேற்காடு கடலில் ராட்சத அலையில் சிக்கி மாயமான வாலிபர் உடல் கரை ஒதுங்கியது.
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலாஜி என்கிற ஹரிஹரன் (வயது 19). இவர் தனது உறவினர்கள், நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி மாயமானர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் ஹரிஹரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வைரவன் குப்பம் அருகே கடல் கரையில் ஹரிசஹரனின் உடல் சடலமாக ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story