செல்போன் திருடிய வாலிபர் கைது
மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன் (வயது 35). இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே நடந்து செல்லும்போது வாலிபர் ஒருவர் அவரிடம் செல்போனை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே சரவணிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் செய்து இருந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சைமன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில் செல்போனை பறித்து சென்ற அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story