கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் 40 மெகாவாட் மின் உற்பத்தி - இலக்கை எட்டி வரலாறு படைத்தது


கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் 40 மெகாவாட் மின் உற்பத்தி - இலக்கை எட்டி வரலாறு படைத்தது
x
தினத்தந்தி 9 March 2022 7:34 PM IST (Updated: 9 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பி.வெங்கடராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கல்பாக்கம், 

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அதிவேக ஈனுலை அதன் 40 மெகாவாட் மின் உற்பத்தி நிலையை கடந்த 7-ந்தேதி மாலை 5.30 மணிக்கு எட்டியது. 1985-ம் ஆண்டு 10.5 மெகாவாட் என்ற குறைந்த அளவு மின் உற்பத்தியில் தொடங்கப்பட்ட இந்த அணு உலை, கலவையான கார்பைடு எரிபொருளைப் பயன்படுத்தி படிப்படியாக 2018-ம் ஆண்டு 32 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெற்று உற்பத்தி அளவு 40 மெகாவாட்டாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அதிவேக ஈனுலை தற்போது இலக்கை எட்டி சிறப்பான வரலாற்றை படைத்துள்ளது.

இதில், தற்போது பணிபுரிகின்ற மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலரின் பங்களிப்பு உள்ளது. இந்திய அணுமின்சார கழகம், மத்திய அரசின் அணுசக்தித் துறை இந்திய மின்னணுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு பெரிதும் உதவி செய்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story