‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 March 2022 8:25 PM IST (Updated: 9 March 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை குவியலால் துர்நாற்றம்
வத்தலக்குண்டு 18-வது வார்டு கடைவீதியில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் அங்கு குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், வத்தலக்குண்டு.
திறந்தவெளி கழிப்பிடம்
சின்னமனூரை அடுத்த ஓடைப்பட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையின் இருபக்கங்களும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
-கருப்பையா, சின்னமனூர்.
சேதமடைந்த சாலை
ஒட்டன்சத்திரம் நகராட்சி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
தேனி அல்லிநகரம் 27-வது வார்டு பாரஸ்ட் சாலை 3-வது குறுக்கு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதோடு, வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
-முத்து, அல்லிநகரம்.
அபாய மின்கம்பம் அகற்றப்படுமா?
வேடசந்தூர் தாலுகா இ.சித்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி தெற்குதெருவில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த அபாய மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் நடவேண்டும்.
-ராதாகிருஷ்ணன், நல்லமநாயக்கன்பட்டி.

Next Story