தூத்துக்குடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை நீர் முத்தையாபுரம் அருகிலுள்ள சூசைநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதனை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் முத்தையாபுரம் துறைமுகம் சாலையில் உள்ள சூசை நகரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் மற்றும் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோர் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனடியாக மோட்டார் மூலம் தேங்கிய மழைநீர் அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story