கூடலூரில் இருந்து தாளூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் உடைந்த நிலையில் இருக்கும் படிக்கட்டு
கூடலூரில் இருந்து தாளூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்சின் பின்பக்க படிக்கட்டு உடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் இருந்து தாளூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்சின் பின்பக்க படிக்கட்டு உடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பழுதான பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர் கிளையில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் தான் இருக்கிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு இடையே பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் அடிக்கடி பழுதாகி நடுவழியில் பஸ்கள் நிற்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே பழுதான பஸ்களை சரிசெய்து அவற்றை நல்ல நிலையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
படிக்கட்டு சேதம்
இந்த நிலையில் கூடலூரில் இருந்து தாளூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்சின் பின்பக்க படிக்கட்டு ஒரு பகுதி சேதமாகி உள்ளது. இதனால் அநத படிக்கட்டு எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் அதில் உள்ள தகடுகள் நீ்ட்டிக்கொண்டு இருப்பதால் பஸ்சில் பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் கால்களை பதம்பார்த்து வருகிறது. இதனால் இந்த பஸ்சில் பயணிக்கும் பயணிகள் காயத்துடன் இறங்கிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது.
பயணிகள் அச்சம்
இது குறித்து பயணிகள் கூறும்போது, கூடலூரில் இருந்து பந்தலூர் பகுதிக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் மிகவும் மோசமாக உள்ளது. அதிலும் படிக்கட்டு உடைந்த நிலையில் இருப்பதால் பஸ்சில் ஏறி இறங்கும்போது பயணிகள் அச்சத்துடனே செல்லக்கூடிய நிலை நீடித்து வருகிறது.
எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உடைந்த நிலையில் இருப்பதை சீரமைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story