முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு


முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 9 March 2022 9:02 PM IST (Updated: 9 March 2022 9:02 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

கூடலூர்

முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

வனப்பகுதியில் வறட்சி

முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீட்டர் பரப்பளவு உடையது. காட்டு யானைகள், புலிகள், காட்டெருமைகள், செந்நாய்கள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. 

கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வதால் அதன் தாக்கம் முதுமலையிலும் காணப்படும்.

இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கும். இதனால் வனவிலங்கு களின் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. 

இதனால் பசுமை இழந்து காணப்படுவதுடன், மரங்களின் இலைகளும் உதிர்த்து வருவதுடன், புற்களும் காய்ந்துவிட்டன. 

பசுந்தீவன தட்டுப்பாடு

இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு தேவையை பூர்த்தி அவை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. 

இதனால் மனித வனவிலங்குகள் மோதல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடைகாலத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பு என்றாலும் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

வனவிலங்குகளின் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகளில் தண்ணீா் ஊற்றப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story