திருக்கோவிலூர் நகராட்சியில் ரூ.2 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பு
திருக்கோவிலூர் நகராட்சி 14-வது வார்டில் ரூ.2 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட டி. பூபதி வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிடும் போது இவர் வார்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்த நிலையில் அதில் முக்கியமான ஒன்று வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்பதாகும்.
தற்போது கவுன்சிலராக டி. பூபதி பொறுப்பேற்றவுடன், தனது சொந்த செலவில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளார்.
அதன்படி அண்ணா நகர் மற்றும் அரசு ஊழியர் குடியிருப்பு நகர்களின் ஒரு பகுதி, ஆஞ்சநேயர் கோவில் தெரு, நேதாஜி தெரு மற்றும் விவேகானந்தர் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் 30 கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கட்டுப்பாட்டு பகுதி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட இருக்கிறது.
Related Tags :
Next Story