ரிஷிவந்தியம் ஒன்றியத்தை 2 ஆக பிரித்து புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்


ரிஷிவந்தியம் ஒன்றியத்தை 2 ஆக பிரித்து புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும்  ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 March 2022 10:24 PM IST (Updated: 9 March 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் ஒன்றியத்தை 2 ஆக பிரித்து புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடைபெற்றது. இதற்கு  ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், நாராயணசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அமிர்தம் ராஜேந்திரன், கோவிந்தராஜ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை வரவேற்றார்.

2 ஆக பிரிக்க வேண்டும்

கூட்டத்தில் ரூ.2 கோடி அளவிலான வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் ஒன்றியத்தில் மொத்தம்  45 ஊராட்சிகள் உள்ளது. இதில் 14 ஊராட்சிகள் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருகிறது. 

எனவே இந்த 14 ஊராட்சிகளை சங்கராபுரம் ஒன்றியத்தில் இருந்து பிரிப்பதுடன், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 60 ஊராட்களில் குறிப்பிடட ஊராட்சிகளை பிரித்து, சங்கராபுரத்தில் இருந்து பிரித்த 14 ஊராட்சிகளுடன் சேர்த்து புதிதாக மேலும் ஒரு ஒன்றியத்தை ரிஷிவந்தியம் தொகுதியில் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு, பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Next Story