கஞ்சா போதை சாக்லெட் விற்ற வட மாநில வாலிபர்கள் 5 பேர் கைது


கஞ்சா போதை சாக்லெட் விற்ற  வட மாநில வாலிபர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2022 11:05 PM IST (Updated: 9 March 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூரில் கஞ்சா, போதை சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா, ஒரு கிலோ போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.

பெருமாநல்லூர்
பெருமாநல்லூரில் கஞ்சா, போதை சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா, ஒரு கிலோ போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
கஞ்சா விற்பனை
பெருமாநல்லூரில் நால்ரோடு மற்றும் ஈட்டிவீரம்பாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெருமாநல்லூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து சுற்றி  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பெருமாநல்லூரில் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதன்மோகன்சாகு (வயது 26), விஸ்வநாதன் சாகு (23) என்பதும் திருப்பூர் கருவம்பாளையத்தில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
போதை சாக்லெட்
மேலும் பெருமாநல்லூரில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுக்குமார் (22), ராஜாகுமார் (23), மற்றும் தர்மேந்திரகுமார் (22) என்பதும், இவர்கள் முட்டியங்கிணறு பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து அவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா, 2 கிலோ போதை சாக்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story