கவரிங் நகை வியாபாரி தற்கொலை


கவரிங் நகை வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2022 11:10 PM IST (Updated: 9 March 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கவுரிங் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி: 

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவர் கவரிங் நகை வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் முருகேசன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவருடைய குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story