அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மனு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 9 March 2022 11:13 PM IST (Updated: 9 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.

குளித்தலை
குளித்தலை அருகேயுள்ள மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்டது விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் சுப்பன் ஆசாரி களம். இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்துவரும் பொதுமக்களுக்கு உரிய பாதை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து பலகட்ட போராடங்களில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட கலெக்டர், முதல் அமைச்சர் தனிப்பிரிவு உள்பட பலருக்கு பாதை வசதி கேட்டு மனு அளித்துள்ளனர். மேலும் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி தரவில்லையெனில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர்.  அப்போது தேர்தலுக்கு பிறகு சாலை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து தங்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமான இந்த பாதை வழியாக ஆம்புலன்ஸ் செல்ல இயலாததால் முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் கட்டிலில் படுக்கவைத்து அவரை சுமந்தபடி வந்து ஆம்புலென்சில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதுபோல் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத காரணத்தால் ஒரு சிறுமி இறந்துவிட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 
இந்தநிலையில் நேற்று மருதூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சுப்பன் ஆசாரிகளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதரக்கோரி மருதூர் பேரூராட்சி தலைவர் சகுந்தலாவிடம் மனு அளித்தனர். 

Next Story