கிராமிய நடனம் ஆடி அசத்திய பெண்கள்


கிராமிய நடனம் ஆடி அசத்திய பெண்கள்
x
தினத்தந்தி 9 March 2022 11:13 PM IST (Updated: 9 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கிராமிய நடனம் ஆடி பெண்கள் அசத்தினர்.

நாமக்கல்:
நாமக்கல் சந்தைபேட்டை புதூர் செல்வகணபதி கோவிலுக்கு உட்பட்ட பகவதி அம்மனுக்கு ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 6-ந் தேதி இரவு 7 மணிக்கு வடிசோறு நிகழ்ச்சியும், 7-ந் தேதி மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து கிராமிய நடனம் நடைபெற்றது. அதில் 50 கிராமிய பாடல்களுக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மங்கை வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினர். ஒரே சீருடையில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஆடிய கிராமிய நடனத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

Next Story