சந்தூரில் எருதுவிடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்பு ஏராளமானோர் கண்டு ரசித்தனர்


சந்தூரில்  எருதுவிடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்பு ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 9 March 2022 11:14 PM IST (Updated: 9 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

சந்தூரில் நடந்த எருதுவிடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

மத்தூர்:
சந்தூரில் நடந்த எருதுவிடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற காளைகளை கால்நடைத்துறை உதவி இயக்குனர் முரளிசதானந்தம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். 
அதன்பின்னர் இந்த காளைகள் விழாவில் பங்கேற்றனர். இந்த காளைகளுக்கு கோ பூஜை செய்து, வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக ஓட விடப்பட்டன. 125 மீட்டர் தூரம் 2 சுற்றுகள் ஓட விடப்பட்டு, அது எவ்வளவு வேகத்தில் ஓடுகிறது என்பதை கணக்கிடப்பட்டது. இதில் குறிப்பிட்ட தூரத்தை மிக குறைந்த நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். 
போலீசார் பாதுகாப்பு
முன்னதாக எருது விடும் விழா அரசு வழிக்காட்டுதல்கள் மற்றும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் லதா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். 
பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story